இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன் வளத்தை அழிக்கின்றார்கள்

-கிண்ணியா நிருபர்-

இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பிக்குள் நுழைந்து தடை செய்யப்பட்ட ரோலர் வலைகளைப் பயன்படுத்தி மீன் வளத்தை அழிக்கின்றார்கள் என கிண்ணியா மீனவ சங்கங்களின் சமாசத் தலைவர் ரீஜால் பாயிஸ் தெரிவித்தார்.

கிண்ணியாவில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்

இதனால் இலங்கை மீனவர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.உடனடியாக இச் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும்.

வட மாகாணம் யாழ்ப்பாணம் கிழக்கு மாகாண பிரதேசங்களில் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தியா ராமேஸ்வரத்திலிருந்து இலங்கை கடற்பரப்புக்குள் யாழ்பாணத்தில் அத்துமீறி பிடிக்கின்றார்கள்.

எமது கடலில் உள்ள அனைத்து வளங்களையும் இலுப்பு மடி வலையை பயன்படுத்தி ரூலறை பயன்படுத்தி பெறுமதி வாய்ந்த வளங்களை சுரண்டி செல்கின்றார்கள்.

குறுகிய காலத்துக்குள் இதனை அவர்கள் அபகரித்து செல்கின்றார்கள் அழிக்கின்றார்கள் இதனால் எமது மீனவர்கள் ரொம்பவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் வந்து தொழில் செய்வதை உடனடியாக தடை செய்ய வேண்டும். அவ்வாறு வருவார்களானால் அவர்களுக்கான தண்ட பணத்தை அரசாங்கம் விதிக்க வேண்டும்.

இலங்கை அரசாங்கம் எங்களுக்கு சலுகை தரும் என்று எண்ணி மீண்டும் மீண்டும் வந்து மீன்பிடிக்கின்றார்கள் இது அனைத்து வளங்களையும் களவாடி செல்வதாக அமைகிறது

இன்று தொழிலில்லாமல் பல நாடுகளுக்கு செல்கின்றார்கள் அங்கும் தொழில் இல்லாமல் இங்கும் கஷ்டப்படுகின்றார்கள்.

கடல் ரீதியான அனைத்து அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவர்கள் சரியான முறையில் நடவடிக்கை எடுக்காததால் தான் எமது வளங்கள் அழி க்கப்படுகின்றன.

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அனைத்து அதிகாரிகளும் கடலோர திணைக்களங்களின்அதிகாரிகள் அனைவரும் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க