இந்தியாவில் இடம்பெற்ற ரயில் விபத்து: 12 பேர் பலி

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் நேற்று புதன் கிழமை இடம்பெற்ற ரயில் விபத்தில் 12 பேர் பலியானதோடு, பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் ரயில் ஒன்றில் இருந்து இறங்கி தண்டவாளத்தில் நடந்த பயணிகளை மற்றொரு தண்டவாளத்தில் பயணித்த ரயில் மோதியபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இறந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் மீட்புப்பணிகளும் விசாரணைகளும் தொடர்ந்தும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.