இந்தியாவின் மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல்

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சட்டப்பேரவை தேர்தல் இன்று புதன்கிழமை நடைபெற்றது

288 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஒரே கட்டமாக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.

காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு இரவு ஆறு மணி வரை நடைபெற்றது .

மாநிலம் முழுவதும் 52, 789 இடங்களில் 1,00,186 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு 9.7 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய தகுதி பெற்றிருக்கிறார்கள்.

இவர்களில் 4.97 கோடி வாக்காளர்கள் ஆண்களும், 4.66 கோடி பெண் வாக்காளர்களும் இருக்கிறார்கள். மதியம் ஒரு மணி வரை 32 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையத்தின் தகவல்கள் தெரிவிக்கிறது.

இதனைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டாம் கட்ட சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. 81 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு முதல் கட்ட தேர்தல் நிறைவடைந்தது.

மீதமுள்ள 38 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. பகல் ஒரு மணி வரை இங்கு மொத்தம் 47 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையத்தின் தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்த இரண்டு மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நவம்பர் 23 ஆம் திகதியன்று நடைபெறுகிறது. அன்று மாலை முதல் முடிவுகள் தெரிய வரும் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.