இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்

மூன்றாவது தடவையாகவும் இந்தியப் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி இன்று திங்கட்கிழமை  தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

அவர் டெல்லியில் உள்ள சவுத் பிளொக் (South Block) அலுவலகத்தில் இன்று முற்பகல் 11.30 அளவில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி அவரது முதல் பணியாக விவசாயிகளுக்கான நலத்திட்டம் தொடர்பான வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

அதேநேரம் வறிய மக்களுக்கான வீட்டுத் திட்டம் தொடர்பான அறிவிப்பையும் அவர் வெளியிடவுள்ளார்.

இதேவேளை இன்று மாலை புதிய அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்