அரிய வகை வலம்புரி சங்குடன் ஒருவர் கைது

மாரவில பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பின் போது மிகவும் அரிய வகை வலம்புரி சங்கை விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாரவில பகுதியைச் சேர்ந்த 24 வயதான ஒருவரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வலம்புரி சங்கு, 1 கிலோ 105 கிராம் எடையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக அவர் கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்