அரச பேருந்தில் டீசல் திருட்டு: 2 பேர் கைது

-பதுளை நிருபர்-

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் டீஷலை திருடியதாக கூறப்படும் பேருந்தின் சாரதியும் நடத்துநரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

மஹியங்கனை டிபோவில் பணிபுரியும் 58 வயதுடைய மாப்பாகடவெவ பகுதியைச் சேர்ந்த சாரதியும், 24 வயதுடைய அம்பாறை பகுதியைச் சேர்ந்த நடத்துநருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர்கள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் மஹியங்கனை தொடக்கம் திஸ்ஸபுர வரை பயணிக்கும் பேருந்தில் இருந்து 10 லீற்றர் டீஷல் திருடியதாக டிப்போ அதிகாரியினால் மஹியங்கனை பொலிஸாருக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பேருந்தின் டீஷல் தாங்கியில் இருந்து 10 லீற்றர் டீஷல் திருடியதாக ஒப்புக் கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க