அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காலமானார்!
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் தமது 100ஆவது வயதில் காலமானார்.
ஜோர்ஜியாவின் ப்ளைன்ஸில் உள்ள தமது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை மதியம் அவர் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட காலம் வாழ்ந்த ஜனாதிபதியாக ஜிம்மி கார்ட்டர் கருதப்படுகிறார்.
ஜிம்மி கார்ட்டர் 1977 ஆம் ஆண்டு முதல் 1981 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் 39வது ஜனாதிபதியாகப் பதவி வகித்தார்.
அத்துடன் ஜிம்மி கார்ட்டர் 2002 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு அவர் கல்லீரல் மற்றும் மூளையைப் பாதித்த மெலனோமா உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்குப் பின்னர், அவர் தமது வீட்டில் மருத்துவ பராமரிப்பினை பெற்றுவந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
- https://minnal24.com/wp-admin/index.php
- செய்திகள்
- நிகழ்வுகள்
- உலக செய்திகள்
- Videos