அமெரிக்காவின் முக்கிய கட்டமைப்பிற்கு இணையவழி தாக்குதல்
அமெரிக்காவின் திறைசேரி திணைக்களத்தின் கணினி கட்டமைப்பிற்கு இணையவழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சீனாவின் அனுசரணையுடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேநேரம், குறித்த திணைக்களத்தில் சேவையாற்றும் பல சேவையாளர்களது தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்தநிலையில், அதனைச் சீரமைப்பு பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.