அமெரிக்காவின் மருத்துவமனை ஒன்றில் துப்பாக்கிசூடு : ஒருவர் பலி
அமெரிக்காவின் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் – நியூஹாம்ப்ஷயர் பகுதியில் உள்ள மனநல மருத்துவமனையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதனால் நோயாளிகள் மருத்துவமனை ஊழியர்கள் அலறியடித்தபடி அங்குமிங்கும் ஓடினர்.
தகவல் அறிந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
பின்னர் துப்பாக்கி சூடு நடத்திய நபர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்