அன்ட்ரொயிட் பயனாளர்களுக்கு எச்சரிக்கை

அன்ட்ரொயிட் ஓ.எஸ் 12, 12 எல், 13 மற்றும் 14 ஆகிய பயனாளர்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புள்ளதாக இந்திய மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியக் கணினி அவசரகால பதில் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அன்ட்ரொயிட் பயனாளர்களின் முக்கியமான தகவல்களைப் பெறுவதற்கு இந்த தாக்குதலை நடத்தலாம் என அந்தக் குழு தெரிவித்துள்ளது.

கட்டமைப்பு, அதன் அமைப்பு மற்றும் கூகுள் ப்ளே சிஸ்டம் ஆகியவற்றில் உள்ள குறைபாடு காரணமாக Android பயனாளர்கள் இந்தத் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே பாதுகாப்பு கருதி மேம்படுத்தலை (update) இன்ஸ்டால் செய்து கொள்ளுமாறு அனைத்து அன்ட்ரொயிட் பயனர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அன்ட்ரொயிட்பயனாளர்கள் அவர்களுடைய சாதனங்களை மேம்படுத்தினால் (update) கடுமையான பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.