அதிவேக நெடுஞ்சாலை விபத்து: பராமரிப்பு பணியில் இருந்த இரண்டு ஊழியர்களின் பரிதாபம்

தெற்கு அதிவேக வீதியின் குருந்துகஹ ஹெதெக்ம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அதிவேக வீதியில் பராமரிப்பு பணியில் இருந்த இரண்டு ஊழியர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து குடிநீர் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியில் பணியில் இருந்த இரு தொழிலாளர்கள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க