அதிரடியாக மாற்றப்பட்ட உக்ரைனின் ஆயுதப்படை தளபதி

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் 3 வது வருடத்தை எட்டியுள்ள நிலையில் உக்ரைனின் ஆயுதப்படை தளபதியை அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி மாற்றியுள்ளார்.

அதன்போது, கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் உக்ரைனின் தரைப்படைகளுக்கு தலைமை தாங்கி வந்த கர்னல் ஜெனரல் அலெக்சாண்டர் சிர்ஸ்கி ஆயுதப்படைகளின் தளபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இந்நிலையில், ஏற்கனவே ஆயுதப்படை தளபதியாக இருந்த வலேரி ஜலுஷ்னி, 2 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய வீரராக தெரிவு செய்யப்பட்டவர்.ஆனால், கடந்த சில காலமாக ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் படைகளுக்கு தொடர் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன.

அத்துடன், ஆளில்லா விமானங்கள் உயர் ரக தொழில்நுட்பம் கொண்ட ஆயுதங்கள் மூலமாக மட்டுமே ரஷ்யாவின் இராணுவத்துடன் உக்ரைனால் போட்டியிட முடியுமென வலேரி ஜலுஷ்னி தெரிவித்திருந்தார்.அதேபோல், போரில் வீரர்கள் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், புதிய வீரர்களை அணிதிரட்ட சட்ட மாற்றங்கள் அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனால் உக்ரைகன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட நிலையில், தற்போது ஆயுதப்படை தளபதி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.