அதிக பனிமூட்டம் : சாரதிகள் சிரமத்தில்!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் நிலவியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை கடும் பனிமூட்டம் நிலவியது.

இதனால் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்குப் பனிமூட்டம் நிலவியுள்ளது.

இதேவேளை பனிமூட்டம் காரணமாகத் தொடருந்து மற்றும் விமான போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 FM