
அட்சய திருதியையில் தங்கத்தின் விலை
அட்சய திருதியை நாளான இன்று புதன் கிழமை தங்கத்தினுடைய விலையில் மாற்றம் இல்லாமல், நேற்றைய விலையிலேயே விற்பனையாகி வருவதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 266,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 244,000 ரூபாவாகவும்,
18 கரட் தங்கம் பவுண் ஒன்று 199,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,250 ரூபாவாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,500 ரூபாவாகவும்,
18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,938 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்