அஜய் தேவ்கனின் திரைப்படத்தில் யொஹானியின் பாடல்

பாலிவுட் நடிகர்களைக் கொண்டு இலங்கை பாடகி யோஹானி டி சில்வாவின் ‘மெனிகே மகே ஹிதே’ பாடலின் ஹிந்தி பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

‘தேங்க் கோட்’ என்ற ஹிந்தி திரைப்படத்திற்காக ‘மெனிகே மகே ஹிதே’ பாடலின் புதிய ஹிந்தி பதிப்பு இன்று வெளியிடப்பட்டது.

இப்படத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் அஜய் தேவ்கன், சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்திய ஊடகங்களிடம் பேசிய இலங்கை பாடகி யொஹானி, ஹிந்தியில் பாடலை பதிவு செய்வது மிகவும் சவாலானது என்று தெரிவித்தார்.

மொழியைக் கற்றுக்கொள்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது, நான் ஹிந்தி இசையைக் கேட்டு வளர்ந்தவள், ஆனால் ஒரு உண்மையான திரைப்பட டிராக்கை உருவாக்குவது மிகவும் வித்தியாசமானது. ரெக்கார்டிங் செய்யும் போது உச்சரிப்பு, அமைப்பு, இயக்கவியல் முற்றிலும் மாறுகிறது, இது போன்ற ஒன்றை நான் செய்வது இதுவே முதல் முறை, என்று யொஹானி தெரிவித்துள்ளார்.

இந்தப் பாடலை ‘போல்னா’ (கபூர் ரூ சன்ஸ்) மற்றும் ‘வே மாஹி’ (‘கேசரி’) போன்ற பாடல்களுக்குப் பெயர் பெற்ற தனிஷ்க் பாக்சி இசையமைத்துள்ளார்.