அகதிகள் படகுகள் கவிழ்ந்ததில் சிறுவர்கள் உட்பட 45 பேர் உயிரிழப்பு!

வடகிழக்கு ஆபிரிக்க நாடான ஜிபூட்டி அருகேயுள்ள செங்கடலில் அகதிகள் படகுகள் கவிழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்துள்ளதாக   சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இறந்தவர்களில் 24 சிறுவர்களும் அடங்குவதாக அறிக்கை இடப்பட்டுள்ளது.

ஜிபூட்டி கடலோரப் பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து மூழ்கியதில் அதிலிருந்த 45 பேர் உயிரிழந்தனர். 310 பேருடன் அந்தப் படகு யேமனிலிருந்து புறப்பட்டது. விபத்திலிருந்து 32 பேர் மீட்கப்பட்டனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜிபூட்டி கடலோர காவல் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வடகிழக்கு பிராந்தியமான கோர் ஆங்கர் கடற்கரைக்கு 150 மீட்டர் தொலைவில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்தப் படகிலிருந்த 115 பேரை மீட்டுள்ளோம். எஞ்சியவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Shanakiya Rasaputhiran

ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானவர்கள் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் பெறுவதற்காக தங்கள் உயிரை பணயம் வைத்து ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுவருகின்றனர்.

அவர்களை அகதிகள் கடத்தல்காரர்கள் பாதுகாப்பற்ற படகுகளில் அளவுக்கு அதிகமாக ஏற்றி அழைத்துச் செல்வதால் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றதாக புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு  தெரிவிக்கின்றது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Poineer Hospital Owner
Jana Uncle Post Ad