ஹெரோயினுக்காக காத்திருந்த பிக்கு கைது

காலி வஸ்கடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் இளம் பிக்கு ஹெரோயின் போதைப்பொருளை பெற்றுக்கொள்வதற்காக காத்திருந்த நிலையில் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் ஹெரோயின் போதைக்கு அடிமையானவர் எனவும் இதற்கு முன்னர் 60 கிராம் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.