ஹாட்வெயார் வியாபார நிலையமொன்றில் தீ விபத்து

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகர் பகுதியில் ஹாட்வெயார் வியாபார நிலையமொன்று நேற்று வெள்ளிக்கிழமை இரவு தீப்பற்றியுள்ளது.

இதன்போது பல பொருட்கள் தீயில் எரிந்து நாசமடைந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த இலங்கை மின்சார சபையினர் குறித்த பகுதியில் மின்துண்டிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து பொது மக்களின் உதவியுடன் திருகோணமலை தீயனைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் இச் சம்பவம் இடம் பெற்றிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொஸிஸார் முன்னெடுத்துள்ளனர்.

தம்பலகாமம் பிரதேச சபைக்கான தீயனைப்பு வாகனம் இன்மை பெரும் குறைபாடாக காணப்படுவதுடன் வியாபார நிலையம் தீப்படித்து சுமார் அரை மணி நேரத்திற்கு பின்னரே
திருகோணமலை மாநகர சபைக்கு சொந்தமான தீயனைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.