
ஹல்துமுல்லை பகுதியில் பாரிய கஞ்சா தோட்டம் முற்றுகை
இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், இலங்கைப் பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது பாரிய அளவிலான கஞ்சா செய்கை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பண்டாரவளை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஹல்துமுல்லை காவல்துறை பிரிவிற்குட்பட்ட அலுத்வெல, ஊனாகந்த ஆகிய பகுதிகளில் பாரிய அளவிலான கஞ்சா செய்கை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த 320,000க்கும் அதிகமான கஞ்சாச் செடிகள் இதன்போது கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 80 மில்லியன் ரூபாய் (8 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
