
ஹர்மன்பிரீத் கவுருக்கு மெழுகு சிலை
மகளிர் உலகக் கிண்ணத்தை இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியுள்ளது.
இந்தநிலையில், மகளிர் உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய மகளிர் அணியின் தலைவியான ஹர்மன்பிரீத் கவுருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மெழுகு சிலை வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 2026ம் ஆண்டு மார்ச் 8ம் திகதி சர்வதேச மகளிர் தினத்தன்று ஹர்மன்பிரீத் கவுரின் மெழுகு சிலை திறந்து வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது
