ஹஜ் யாத்­தி­ரை­யின்­போது குறைந்­த­பட்சம் 550 யாத்­தி­ரி­கர்கள் கடும் வெப்பம் கார­ண­மாக உயி­ரி­ழப்பு

இவ்­வ­ருடம் ஹஜ் யாத்­தி­ரை­யின்­போது குறைந்­த­பட்சம் 550 யாத்­தி­ரி­கர்கள் கடும் வெப்பம் கார­ண­மாக உயி­ரி­ழந்­துள்­ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உயி­ரி­ழந்­த­வர்­களில் எகிப்­தி­யர்­களே அதி­க­ம் எனவும் குறைந்­த­பட்சம் 323 எகிப்­திய யாத்­தி­ரி­கர்கள் உயி­ரி­ழந்­துள்­ளனர் என அரே­பிய இரா­ஜதந்­தி­ரிகள் தெரி­வித்­துள்­ளனர் என சர்வதேச செய்தி நிறுவனமாக AFP செய்திச் சேவை தெரி­வித்­துள்­ளது.

மேற்­படி எகிப்­தி­யர்­களில் ஒரு­வரைத் தவிர அனை­வரும் கடும் வெப்பம் கார­ண­மாக உயி­ரி­ழந்துள்ளதுடன் ஒருவர் சன­நெ­ரி­சலில் சிக்கி காய­ம­டைந்­து உயி­ரி­ழந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

புனித மக்கா நக­ருக்கு அரு­கி­லுள்ள அல் முவைசெம் நகரின் வைத்­தி­ய­சாலை பிரேத அறை­யி­லி­ருந்து இப்­புள்­ளி­வி­ப­ரங்கள் கிடைத்­த­தா­க இரா­ஜ­தந்­திரி ஒருவர் தெரி­வித்தார்

இதே­வேளை,  உயி­ரி­ழந்த ஜோர்­தா­னிய ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் எண்­ணிக்கை 60ஆக அதி­க­ரித்­துள்­ளது.

41 ஜோர்­தா­னி­யர்கள் இறந்­துள்­ளனர் என செவ்­வாய்க்­கி­ழமை ஜோர்­தா­னிய அர­சாங்கம் தெரி­வித்­தி­ருந்­தது.

பல்­வேறு நாடு­க­ளி­லி­ருந்து கிடைத்த தர­வு­க­ளின்­படி உயி­ரி­ழந்­த­வர்­களின் எண்­ணிக்கை 577ஆக அதி­க­ரித்­துள்­ளது என AFP தெரி­வித்­துள்­ளது.

அதேவேளை அல்- முவைய்செம் வைத்­தி­ய­சாலை பிரேத அறைக்கு புள்­ளி­வி­ப­ரங்­க­ளின்­படி 550 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர் என இரா­ஜந்­தி­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

ஈரான், இந்­தோ­னே­ஷியா, செனகல் நாட்­ட­வர்­களும் உயி­ரி­ழந்­துள்­ளனர் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்