ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனம் தொடர்பில் எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு
ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இந்த அறிக்கையைப் போன்று தகவல் மற்றும் தொடர்பாடல் துறையின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது-
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்