ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் ஏவுதல் நிறுத்தம்
உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழில் அதிபருமான எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்நிறுவனம் ஸ்டார்ஷிப் என்ற பெயரில் ராக்கெட்டை தயாரித்து விண்ணில் செலுத்தி வருகிறது.
இது இதுவரை 9 முறை ஸ்பேஸ் எக்ஸ்சின் ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 10-வது ஸ்டார் ஷிப் ராக்கெட் நேற்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்துஏவப்படுவதாக இருந்தது.
இந்நிலையில், ராக்கெட் ஏவுதலுக்கு ஒருசில மணிநேரங்களுக்கு முன்பே ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படது.
இதன் காரணமாக ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் ஏவுதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டப்பின் ராக்கெட் மீண்டும் விண்ணில் ஏவப்படும் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.