ஸ்பெயினில் பாரிய காட்டுத்தீ
ஸ்பெயினின் மேற்குப் பகுதியில் பாரிய காட்டுத்தீ பரவியதன் காரணத்தால் அப் பகுதியிலிருக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல கிராமங்களிலிருந்து 550 பேர் தீ அபாயத்தினால் வெளியேற்றப்பட்டதுடன் 275-க்கும் மேற்பட்ட தீயணைப்பாளர்கள், நீர் பாய்ச்சும் 14 விமானங்கள், சுமார் 165 இராணுவ வீரர்கள் சேர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுவரை 1,500 ஹெக்டர் நிலம் தீயில் அழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்