
ஷ்ரேயாஸ் ஐயர் பங்கேற்பதில் சந்தேகம்
தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையில் மருத்துவ குழு தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் இடம்பெற்ற 3ஆவது ஒருநாள் போட்டியின் போது ஏற்பட்ட காயத்திலிருந்து அவர் இன்னும் மீண்டு வராததால், குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென்னாப்பிரிக்க அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
