ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக் மீண்டும் ரவூப் ஹக்கீம்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மீண்டும் இன்று திங்கட்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 30ஆவது பேராளர் மாநாடு இன்று புத்தளத்தில் நடைபெற்ற போதே ரவூப் ஹக்கீம் மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மாநாட்டில் கட்சியின் கொள்கைக்கு எதிராக செயற்பட்ட குற்றச்சாட்டில் இடைநிறுத்தப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம் மற்றும் எம்.எஸ். தௌபீக் ஆகியோரும் பேராளர் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த நிலையில் , நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹாரிஸ் இம்முறை பேராளர் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
கட்சியின் பதவி நிலைகளுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான விபரங்கள்.
கட்சியின் தலைவராக ரவூப் ஹக்கீமும் , செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் கட்சியின் தேசிய அமைப்பாளர் , பொருளாளராக நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர் மற்றும் அலிசாஹீர் மௌலானா, யு.டி.எம்.அன்வர், சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் ஆகியோர் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர்களாகவும், கட்சியின் தவிசாளராக அப்துல் மஜீத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அரசியல் விவகார, கலாசார பணிப்பாளராக மொஹம்மட் சப்ராஸ் , உதவி தேசிய அமைப்பாளராக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.