வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வயல்களை பார்வையிட விசேட குழு
-மூதூர் நிருபர்-
வெள்ளத்தினால் அதிகளவு பாதிக்கப்பட்ட திருகோணமலை – சேருநுவர கமநல சேவைப் பிரிவுக்குட்பட்ட வயல் பகுதிகளுக்கு கமநல காப்புறுதிச் சபையின் விசேட அதிகாரிகள் குழு இன்று திங்கட்கிழமை வருகை தந்து பார்வையிட்டு சேத விபரங்களை அறிக்கையிட்டனர்.
கமநல சேவை காப்புறுதிக்குழுவின் உத்தியோகத்தர்கள், சேருநுவர கமநல சேவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்ட வயல் நிலங்களுக்கு நேரடி கள விஜயம் மேற்கொண்டு சேத நிலமைகளை பார்வையிட்டு விவசாயிகளிடமிருந்து தகவல்களை சேகரித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது விவசாயி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,
“தமது வேளாண்மைச் செய்கை பாதிக்கப்பட்ட நிலையில் பார்வையிடப்படவில்லை. இப்போதுதான் வந்து பார்க்கின்றனர். தாம் இரண்டாவது தடவையாக விதைப்புச் செய்துள்ளதாகவும் அதிகளவு செலவு ஏற்பட்டுள்ளதாகவும்” அவர் கவலை வெளியிட்டுள்ளார். மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்