
வெள்ள அபாய எச்சரிக்கை
நாட்டில் கடும் மழை காரணமாகப் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா ஆகிய நீர் நிலைகளின் தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொடை, ஜா-எல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை அமுலில் உள்ளது.
