வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பில் கண்காணிக்கப்படுகிறது
இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கக்கூடிய வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் சமூக ஊடகப் பதிவுகளை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகம் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது .
சுற்றுலாத்துறையைப் பாதிக்கக்கூடிய இவ்வாறான செயல்களுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பணியகத்தின் தலைவர் புத்திக ஹேவாவசம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில், வெலிகம சுற்றுலா கடல் பகுதியில் உள்ளூர் நபருடன் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவர் சண்டையிடும் காணொளியை சமூக ஊடகத்தில் பதிவிட்ட சம்பவத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
முறையான முறைப்பாட்டின் பேரில், தொடர்புடைய சமூக ஊடகத் தளங்களுக்கு அறிவிக்கப்பட்டு, அந்தக் காணொளியை நீக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் அண்மையில் இணையத்தில் பகிரப்பட்ட வெளிநாட்டுப் பெண் ஒருவர் பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு ஆளானமை தொடர்பில் வெளியிடப்பட்ட மற்றுமொரு காணொளியால் , நாட்டின் சுற்றுலாத் துறையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் தொடர்பிலும் பணியகம் கவலை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் சுற்றுலாத் துறைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளும் எந்தவொரு வெளிநாட்டவர் மீதும் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் தலைவர் புத்திக ஹேவாவசம் எச்சரித்துள்ளார்.
