வெளிநாட்டு வேலைவாய்ப்பு: மோசடி செய்த பெண் கைது.

வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஹலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வரும் சந்தேக நபர், கட்டார் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் தாதியர் சேவை மற்றும் விடுதி துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 33 பேரை ஏமாற்றி 81 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

ஹலவத்தை நீதிமன்றில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபர் நிகவெரட்டியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்