நுவரெலியா – பதுளை பிரதான வீதியில், கிரகரி வாவி அருகே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வெலிமடையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கிப் பயணித்த வேன், வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி, எதிர்த்திசையில் பயணித்த மற்றுமொரு வேன் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனவும், இரண்டு வேன்களும் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து நடந்த சந்தர்ப்பத்தில் குறித்த வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
சம்பவம் குறித்து நுவரெலியா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.




