வெளிநாட்டில் வசிக்கும் சகோதரிகளுக்கு கடிதம்: விபரீத முடிவெடுத்த பெண்

ஹோமக பிரதேசத்தில் பெண் ஒருவர் மூன்று கடிதங்கள் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துள்ளார்.

ஹோமாகம, அத்துரிகிரிய வீதியிலுள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வரும் நதிக்கா காசினி படவல (வயது – 45) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் நியூசிலாந்து மற்றும் டுபாயில் வசிக்கும் தனது சகோதரிகளுடன் அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் மற்றும் உரையாடல்களை மேற்கொள்வார். அதற்கமைய, நேற்று முன்தினம் சனிக்கிழமை பகல் முழுவதும் இப்பெண்ணை அழைத்த போதும் பதில் கிடைக்காததையடுத்து இதுபற்றி மற்றுமொரு உறவினரிடம் சகோதரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் வீட்டிற்கு சென்று பார்த்த போது அவரது உடல் அறையின் நடுவில் கிடப்பதை அவர் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதிகாரிகள் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து, வீட்டுக்குள் சென்று சோதனையிட்டபோது, ​​அறையின் நடுவில் உள்ள நாற்காலியில், மர்மமான முறையில் பெண் சடலம் கிடந்ததை அவதானித்துள்ளனர்.

மேலும், உயிரிழந்த பெண்ணின் சடலத்திற்கு அருகில் மாத்திரைகள் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் நியூசிலாந்து மற்றும் டுபாயில் வசிக்கும் தனது சகோதரிகளுக்கு எழுதி கடிதங்களும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் இலங்கை வந்ததன் பின்னரே இறுதி தீர்மானம் எடுக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.