சுவிட்சர்லாந்தில் வீதியில் பறந்த கார் பறிமுதல்

சுவிட்சர்லாந்தில் அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்திய வாகன சாரதியின் உரிமம் பறிக்கப்பட்டுள்ளது.

செயிண்ட் கேலன் மாநிலத்தில் உள்ள பிரதான வீதியில் மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க வேண்டிய பகுதியில் மணிக்கு 154 கிலோமீற்றர் வேகத்தில் காரை செலுத்திச் சென்ற சுவிஸ் நாட்டவரான 32 வயதுடைய இளைஞனின் வாகன உரிமம் உடனடியாக ரத்துச் செய்யப்பட்டுள்ளதோடு , வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்று கிழமை பிற்பகல் 3.35 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மாநில பொலிசாரின் இணையதள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.