வீதிகளில் களமிறக்கப்பட்டுள்ள 1,500 பொலிஸார்

கொழும்பில் விசேட போக்குவரத்து கடமைகளுக்காக 1500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

76 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் ஏனைய கடமைகளுக்காக 4,000 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பில் இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்று கிழமை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.