வீதி விபத்தில் ஒருவர் பலி
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் இன்று மாலை யாழ்ப்பாணத்திலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் வீதியை குறுக்கறுத்து செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளகியுள்ளன.
விபத்தில் காயமடைந்து மோட்டார் சைக்கிளில் தூக்கி வீசப்பட்ட நபர் மீது வீதியில் பயணித்த மற்றுமொரு வாகனம் ஏறி சென்ற நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
புது குடியிருப்பு ஒன்பதாம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சந்திரமோகன் சானுசன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர் தர்மபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் புது குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் .