பயிர் விதைகளும் 10,000 ரூபா பணமும் வழங்கி வைப்பு

பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தினால் பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்களுக்கான வீட்டுத் தோட்டம் செய்வதை ஊக்குவிக்கும் முகமாக பயிர் விதைப் பொதிகளும் தலா 10,000 ரூபா வீதம் காரைதீவில் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.பார்த்திபன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் பி.ராஜகுலேந்திரன், பாதிப்புற்ற பெண்கள் அரங்க உத்தியோகத்தர்களான வ.இந்திராணி, ச.அன்னலெட்சுமி, காரைதீவு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெனிதா மோகன், மகளிர் அபிவிருத்தி வெளிக்கள உதவியாளர்கள் போன்றோரும் கலந்து கொண்டனர்.

-கல்முனை நிருபர்-

செய்திகள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை அறிய தினமும் Minnal24.com பார்க்கவும்

எமது குழுவில் இணைய கீழே உள்ள Join Whatsapp Group ஐ அழுத்தவும்

JOIN WHATSAPP GROUP