வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் மருதங்கேணிக்கு கள விஜயம்!

-கிளிநொச்சி நிருபர்-

வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க நேற்று வியாழக்கிழமை காலை 9 மணியளவில் வடமராட்சி கிழக்கு தாழையடியில் அமைந்துள்ள கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை பார்வையிட கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

தாளையடி கடல்நீரை நன்னீராக்கும் செயல்முறைகள் மற்றும் பொறியியல் தொகுதி என்பவற்றை பார்வையிட்ட அமைச்சர் அங்கு அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.