விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முத்துநகர் விவசாயிகளை சந்தித்த இம்ரான் மஹ்ரூப்

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை முத்து நகரில் குறிப்பிட்ட சில இடங்களில் விவசாய நடவடிக்கைகளை தொடரலாம் என திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அதற்கு இணங்க அப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்த விவசாயிகளான எஸ். சபருல்லா, எஸ். ரிபாஸ், கே.சத்தார், என். சுஜாத், ஏ.எம். அஜ்மீர் ஆகியோர் கைது செய்யப்பட்டு 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை திருகோணமலை சிறைச்சாலைக்கு சென்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் பார்வையிட்டார்.