விமான விபத்தில் ஆறுவர் பலி

தாய்லாந்தில் பாராசூட் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளானதில் ஆறு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

பாங்காக்கிலிருந்து தென்மேற்கே 130 கிமீ (80 மைல்) தொலைவில் உள்ள கடலோர ரிசார்ட் பகுதியான சா-ஆம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 08:00 மணியளவில் சிறியரக விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரியவருகின்றது.

இந்த விபத்தில் ஐந்து அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும், ஆறாவது நபர் மருத்துவமனையில் இறந்ததாகவும் ராயல் தாய் பொலிஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விமானத்தின் கருப்புப் பெட்டி தரவுப் பதிவாளரை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

கரையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் விமானம் கடலில் வீழ்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன, அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட காட்சிகள் விபத்து நடந்த இடத்தை அடைய மக்கள் கடலில் நடந்து செல்வதைக் கட்டுகின்றன.