விமல் வீரவங்சவின் போராட்டம் – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன்று, இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று  திங்கட்கிழமை காலை ஆரம்பித்த தொடர் சத்தியாக்கிரக போராட்டம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வீதியை மறிக்காத வகையிலும், உயர்தரப் பரீட்சைகள் இடம்பெற்று வரும் நிலையில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாதெனவும் குறித்த நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.