விடுதியில் இருந்து சிறுமி ஒருவர் சடலமாக மீட்பு
யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றிலிருந்து இன்று புதன் கிழமை பிற்பகல் சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருகோணமலையைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமி 3 நாட்களுக்கு முன்னரே இறந்து விட்டார் எனவும் தகவல்கள் குறித்த சிறுமியுடன் அறையில் தங்கியிருந்த மற்றுமோர் பெண் மயக்க நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.