
விசர் நாய்க்கடி ஊசிமருந்து மாத்திரைகள் பெறுகை – அமைச்சரவை அனுமதி!
விசர் நாய்க்கடி ஊசிமருந்து (மனிதப் பயன்பாட்டுக்கு) 0.5ml/1ml செயலிழக்கச் செய்யப்பட்ட மாத்திரைகள் 3,000,000 இற்கான பெறுகைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
நீர்வெறுப்பு நோய் பீடிப்பதை தடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் விசர் நாய்க்கடி ஊசிமருந்து (மனிதப் பயன்பாட்டுக்கு) 0.5ml/1ml செயலிழக்கச் செய்யப்பட்ட மாத்திரைகள் 3,000,000 இற்கான பெறுகைக்கான சர்வதேச போட்டி விலைமுறிகள் கோரப்பட்டுள்ளன.
அதற்காக ஆறு விலைமுறிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழு மற்றும் பெறுகை மேன்முறையீட்டு சபையின் விதந்துரைக்கமைய மேற்குறிப்பிட்ட ஒப்பந்தத்தை விபரங்களுடன் கூடிய பதிலளிப்புக்களை வழங்கியுள்ள குறைந்த விலைமனுதாரரான Citihealth imports (Pvt) Ltd (Manufacturer : Serum Institute of India Pvt Ltd, India) இற்கு 360 மில்லியன் ரூபாய் தொகைக்கு (பெறுமதிசேர் வரியில்லாமல்) வழங்குவதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
