விகாரையில் கூடியிருந்த மக்களுடன் சுமூகமான உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நாகதீப ரஜமஹா விஹாரைக்குச் சென்று, விகாராதிபதி வண, நவதகல பதுமகித்தி திஸ்ஸ தேரரைச் சந்தித்து, நலம் விசாரித்ததுடன் சிறு உரையாடலிலும் ஈடுபட்டார்.

இன்று செவ்வாய்க்கிழமை வடக்கில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளின் பின்னர் ஜனாதிபதி, இந்த நிகழ்வில் இணைந்து கொண்டதுடன், விகாராதிபதி தேரர், மத அனுஷ்டானங்களின் பிறகு ஜனாதிபதியை ஆசிர்வதித்தார்.

விகாரையில் கூடியிருந்த மக்களுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுமூகமான உரையாடலில் ஈடுபட்டார்.

இந்த நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.