வாழைச்சேனையில் வயோதிபரின் சடலம் மீட்பு

வாழைச்சேனை ஓட்டமாவடி ஆற்றில் இருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக, வாழைச்சேனை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஓட்டமாவடி மீராவோடை சந்தையின் பின்பகுதியில் உள்ள ஆற்றில் மிதந்தநிலையில் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ஆற்றில் மீன்பிடிப்பதற்காக சென்ற மீனவர்களினாலேயே , சடலம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் பிரேதபரிசோதனைகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.