வாழைச்சேனையில் 19 வயது இளைஞன் சடலமாக மீட்பு
-க.சரவணன்-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மியான்குள காட்டுப் பாதையில் மாடு மேய்கச் சென்ற 19 வயது இளைஞன் ஒருவர் இன்று திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
வாழைச்சேனை வட்டவான் பகுதியைச் சேர்ந்த ஜீவேந்திரன் சினேஜன் (வயது-19) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை 3 பேர் குறித்த காட்டுப் பகுதிக்கு மாடு மேய்கச் சென்றுள்ள நிலையில் சம்பவதினமான இன்று திங்கட்கிழமை மலம்கழிக்க சென்ற நிலையில் அவர் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.