வார இறுதி நாளில் தங்க விலை நிலவரம்

கடந்த வாரம் முதல் தங்க விலையில் ஏற்ற, இறக்க நிலை காணப்படுவதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 266,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 244,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் பவுண் ஒன்று 199,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 25,938 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.