வாய் புண் குணமாக பாட்டி வைத்தியம்

வாய் புண் குணமாக பாட்டி வைத்தியம்

வாய் புண் குணமாக பாட்டி வைத்தியம்

💥இப்போதெல்லாம் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகள் நம் உடலில் ஏற்படுகிறது. அந்த வகையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய ஆரோக்கிய பிரச்சனைகளில் ஒன்று தான் வாய் புண். இந்த வாய் புண் ஒருவருக்கு வந்தால் சரியாக உணவருந்த முடியாது, சரியாக பல் துலக்க முடியாது, ஏன் தண்ணீர் கூட அருந்தமுடியாது. இந்த வாய் புண் வந்தால் ஏகப்பட்ட பிரச்னையை நாம் சந்திக்க வேண்டியதாக இருக்கும். இதன் காரணமாகவே பலர் இந்த வாய் புண் சரியாகணும்னு மெடிக்கல் ஷாப்ல விற்கப்படும் கண்ட கண்ட மாத்திரை மற்றும் ஆயில்மென்ட் போன்றவற்றை பயன்படுத்துவார்கள். இதையெல்லாம் வாங்கி நீங்க பயன்படுத்துனால் உங்களுக்கு மேலும் மேலும் பிரச்சனை அதிகரிக்குமே தவிர வாய் புண் குணமாகாது.

💥அந்தவகையில் வாய் புண் குணமாக இயற்கை வைத்தியம் என்னென்ன உள்ளது என்பதை இக்கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

🎈உடலில் நீர்ச்சத்து குறைகின்றது என்றால் இது போன்ற பிரச்சனைகளை அதிகம் சந்திக்க வேண்டியதாக இருக்கும். எனவே உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்தி வந்தாலே போதும் இந்த வாய் புண் பிரச்சனை குணமாகும். அதேபோல் நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடலாம். அதேபோல் இளநீர் அருந்தலாம் இவையெல்லாம் வாய் புண் குணமாக ஒரு சிறந்த மருந்தாகும்.

🎈மணத்தக்காளியின் பசுமையான இலைகளை மென்று சாற்றை விழுங்கலாம். இதே போல் ஒரு நாளைக்கு 5 முதல் 6 இலைகளை பச்சையாக  மென்று  சாப்பிட்டால் வாய்புண் வேகமாக குணமாகும்.
🎈தேங்காய் பால் அல்சர் பிரச்சனைக்கு ஒரு சிறந்த தீர்வினை அளிக்கும் என்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதேபோல் இந்த தேங்காய் பால் வாய் புண் குணமாக ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. எனவே வாய்ப்புண் குணமாக தொடர்து தேங்காய் பாலினை அருந்தி வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.
🎈வாய் புண் பிரச்சனையால் அதிகம் அவதிப்பட்டவர்கள் தேன் அல்லது வெண்ணையை புண் உள்ள இடத்தில் அப்ளை செய்து வர, கூடிய விரைவில் புண் குணமாகும். அதேபோல் பாலில் தேனை சிறிதளவு கலந்து தொடர்ந்து அருந்தி வர வாய் புண் குணமாகும்.
🎈வாய்ப்புண் பிரச்சனை உள்ளவர்கள் சிறிதளவு தேங்காய் எண்ணெயுடன் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின் இந்த கலவையை புண் உள்ள இடத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்யுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்து வர வாய் புண் சரியாகும். \
🎈தினமும் மூன்று வேலை கொய்யா இலையை  மென்று அதன் சாற்றினை விழுங்கி வந்தால் வாய் புண் குணமாகும். வாழை பூ உணவில் சேர்த்து கொண்டால் வயிற்று புண் மற்றும் வாய் புண் குணமாகும்.
🎈நெய். வாய்ப்புண்களை குணப்படுத்த செய்யும். சிறந்த முடிவுகளை பெறுவதற்கு நெய் பயன்படுத்தினாலே போதுமானது. வாய்ப்புண்கள் இருக்கும் இடத்தில் அவ்வபோது நெய்யை சுத்தமான விரலில் தொட்டு தடவி வந்தால் புண் சரியாகக் கூடும்.
வாய் புண் குணமாக பாட்டி வைத்தியம்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்