வாகரை விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

வாகரை பகுதியில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வாகரை மாங்கேணி புல்லாவி சந்தியில் இடம்பெற்ற இவ்விபத்தில் வாழைச்சேனையைச் சேர்ந்த சலீம் றபாய்தீன் (வயது-40) என்பவரே உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனையில் இருந்து மீன்வியாபாரத்திற்கு வாகரைக்கு சென்ற இவர் மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது எதிரே வந்த பஸ்சில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வாகரை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.