
வாகன விபத்து: ஒருவர் மரணம்
வீரம்புகெதர, கிரலபொக்க பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிரலபொக்க பகுதியில் வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் பின்னால் அமர்ந்து சென்றவரும் காயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னால் அமர்ந்து சென்றவர் உயிரிழந்துள்ளார்.
சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
