வாகன விபத்து: 10 பேர் காயம்

இந்தியாவில் செங்கல்பட்டு அருகே இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்

திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு 30க்கும் மேற்பட்ட பயணிகளோடு புறப்பட்ட அரசு பேருந்தும் சென்னையிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வந்த லொரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில், பேருந்து சாரதி, நடத்துநர் மற்றும் பயணிகள் என 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அரசு பேருந்து சாரதியின் கவனக்குறைவால், விபத்து ஏற்பட்ட நிலையில், அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்